Veppilai For Dandruff: பொடுகு தொல்லையிலிருந்து சீக்கிரம் விடுபட வேப்பிலையை இந்த வழிகளில் பயன்படுத்துங்க.

  • SHARE
  • FOLLOW
Veppilai For Dandruff: பொடுகு தொல்லையிலிருந்து சீக்கிரம் விடுபட வேப்பிலையை இந்த வழிகளில் பயன்படுத்துங்க.

Ways To Use Neem Leaves For Hair Dandruff: சருமம் மற்றும் முடி இரண்டிற்கும் சிறப்பு கவனிப்பு தேவை. அதன் படி, கூந்தலில் கவனம் இல்லாததால், முடி உடைதல், உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குளிர்காலத்தில் தலைமுடியில் பொடுகு ஏற்படுவது பொதுவானது தான். ஆனால், இது பெரும்பாலான மக்களை தொந்தரவு செய்கிறது.

கூந்தலுக்குக் கவனம் செலுத்தாத போது, எண்ணெய் மற்றும் ஹேர்பேக் பயன்படுத்தாத போது முடியின் ஊட்டச்சத்து குறையலாம். இதனால், பொடுகு பிரச்சனை ஏற்படலாம். இந்த பொடுகு பிரச்சனையை நீக்க பல பொருள்கள் சந்தையின் கிடைக்கின்றன. ஆனால், இதை பயன்படுத்தியும் பொடுகுத் தொல்லை சிலருக்கு நீங்கவில்லையெனில் வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். அந்த வகையில் பொடுகு தொல்லை நீங்க வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. இதில் பொடுகு தொல்லை நீங்க வேப்பிலை பயன்படுத்தும் முறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hibiscus For Hair: கரு கரு கூந்தலுக்கு செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க.

பொடுகு பிரச்சனை நீங்க வேப்பிலை பயன்படுத்தும் முறை

தலையில் உள்ள பொடுகு பிரச்சனையை நீக்க கீழே கொடுக்கப்பட்ட வழிகளில் வேப்பிலையைப் பயன்படுத்தலாம்.

தேன் கலந்த வேப்பிலை

தலைமுடியில் வறட்சி ஏற்படுவதால் பொடுகு பிரச்சனை ஏற்படலாம். இதை போக்குவதற்கு வேப்ப இலைகளுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம். தேனில் உள்ள பண்புகள் முடியின் பாக்டீரியா தொற்றுக்களை நீக்க உதவுகிறது. இதற்கு சுமார் மூன்று டீஸ்பூன் வேப்பம் பூ பேஸ்ட் உடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தலைமுடியில் தடவலாம்.

அடுத்ததை படிக்கவும்

Constipation Solution: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற எளிய வழிகள்!

பொறுப்புத் துறப்பு