Expert

Belly Fat Reduce Tips: வெறும் 21 நாள்ல தொப்பை கொழுப்பைக் குறைக்க இத செய்யுங்க போதும்.

  • SHARE
  • FOLLOW
Belly Fat Reduce Tips: வெறும் 21 நாள்ல தொப்பை கொழுப்பைக் குறைக்க இத செய்யுங்க போதும்.

21 Days Challenge To Lose Belly Fat: இன்று பலரும் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் உடல் எடை அதிகமாகி அதைக் குறைக்க முயற்சிக்கின்றனர். இது குறிப்பாக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை வெளியில் சாப்பிடுவது, சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் கொழுப்பு அதிகமாகி, உடல் பருமன் அதிகமாகலாம். ஆண், பெண் என யாராக இருந்தாலும் தொப்பையை யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனெனில், இது நோய்களை அதிகரிப்பதுடன், தோற்றத்தையும் மாற்றுகிறது. இந்த சில பழக்கவழக்கங்களே தொப்பையை அதிகரிக்கக் காரணமாகிறது.

அதன் படி டயட்டீஷியன் ரமிதா கவுர் அவர்கள் சமூக ஊடகங்களில் தொப்பையைக் குறைக்க சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். நிபுணர்களின் கூற்றுப்படி, தொப்பைக் கொழுப்பைக் குறைக்க ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சியுடன் இந்த சிறிய பழக்கங்களையும் வழக்கமான முறையில் சேர்த்துக் கொள்வது அவசியம். இந்த வழக்கமான பழக்கங்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் 21 நாள்களில் தொப்பையைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Exercises: தொப்பை வேகமாகக் குறைய தினமும் இந்த யோகாசனங்களை செய்யுங்க

தொப்பையைக் குறைக்க பின்பற்ற வேண்டியவை

வயிற்றுத் தொப்பையைக் குறைக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் கீழே கொடுக்கப்பட்ட பழக்க வழக்கங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிட தியானத்துடன் நாளைத் தொடங்கலாம்.
  • 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கலந்து வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
  • மதிய உணவு உண்பதற்கு முன் ஆப்பிள் சைடர் வினிகருடன், இசப்கோல் கலந்து சாப்பிட வேண்டும். பின் 3 முறை ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும்.
  • பருவகால தானியங்களான ராகி, தினை போன்றவற்றை உணவில் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
  • உணவுகளில் கறிவேப்பிலை மற்றும் பாசிப்பருப்பு போன்றவற்றைச் சேர்க்கலாம்.
  • பெருஞ்சீரகம் மற்றும் செலரியை தேநீர் தயாரித்து இரவு உணவிற்கு அரை மணி நேரம் கழித்து குடித்து விட்டு தூங்கலாம்.
  • தினமும் குறைந்தது 7000 படிகள் தொடர்ந்து நடக்க முயற்சிக்க வேண்டும்.
  • எடை கட்டுப்பாட்டைக் குறைக்க மனதில் கொள்ள வேண்டியவை

    • போதுமான அளவு தண்ணீர் குடிக்க முயற்சிக்க வேண்டும்.
    • தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • வெளியில் இருந்து ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
    • உணவில் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்.
    • உணவில் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்
    • புரத உட்கொள்ளலை அதிகரிக்க முயற்சிக்கலாம்
    • உணவை மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்
    • உணவுக் கட்டுப்பாட்டின் போது உணவைத் தவிர்க்காமல் இருப்பது நல்லது.
    • தொப்பையைக் குறைக்க இந்த பழக்க வழக்கங்களைச் செய்யலாம். அதே சமயம், இந்த பழக்க வழக்கங்களுடன் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும், வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்வதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

      இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Drinks: வெறும் வயிற்றில் இதை குடித்தால் போதும்; எப்பேர்ப்பட்ட தொப்பையும் காணாமல் போய்டும்!

      Image Source: Freepik

அடுத்ததை படிக்கவும்

Constipation Solution: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற எளிய வழிகள்!

பொறுப்புத் துறப்பு